சென்னை:சேலம், திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய திமுக தொண்டர்களுக்கும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (ஜன.23) வெளியிட்ட X பதிவில், 2007ஆம் ஆண்டு இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டை நடத்திக் காட்டிய நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2024-ல் இளைஞரணியின் 2வது மாநில மாநாட்டிற்கான உத்வேகத்தை தந்தார். அவர்களுக்கு என் அன்பும், நன்றியும். மாநாட்டுக்கான இடத்தைத் தேர்வு செய்வதில் தொடங்கி, அனைவருக்கும் உணவு பரிமாறுதல் வரை அனைத்தையும் திட்டமிட்டு Zero Food Waste என்று சொல்லக்கூடிய அளவுக்கு நேர்த்தியாக மாநாட்டின் ஏற்பாட்டுகளை அண்ணன் செய்திருந்தார்கள்.
'இன்னார்க்கு இன்னது' என்று சொல்லும் பாசிஸ்ட்டுகளையும் அவர்களுக்கு ஆமாம் சாமி போடும், அடிமைகளையும் தேர்தல் களத்தில் வீழ்த்திடுவோம். 'எல்லாருக்கும் எல்லாம்' எனும் திராவிட மாடல் தத்துவம் இந்திய ஒன்றியம் முழுவதும் பரவுகின்ற வகையில் அயராது உழைக்க இளைஞரணி மாநாடு எல்லோருக்கும் உத்வேகம் தந்திருக்கிறது.