திருவண்ணாமலை:தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையம் அருகே, திருவண்ணாமலை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் மகளிர், இலவச பேருந்து வசதி, காலை உணவுத் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, குடும்பத் தலைவிக்கு உரிமைத் தொகை ஆகியவை வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.