சென்னை: துபாயில் நடைபெற்ற 24H Dubai 2025 சர்வதேச கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் தலைமையிலான அணி மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த வெற்றிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில் கார் பந்தயத்தில் ஈடுபட்டு வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேசிங்' என்ற பெயரில் தமது தலைமையில் ஓர் அணியையும் உருவாக்கியுள்ளார். இந்த அணி துபாயில் நடைபெற்ற 24H Dubai 2025 சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்று தற்போது மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இது குறித்த வீடிடோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வெற்றியை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் அஜித் குமாரின் இந்த வெற்றிக்கு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "துபாயில் நடந்த 24H 991 பிரிவு ரேஸில் அஜித்குமார் மற்றும் அவரது அணி 3வது இடத்தை பிடித்துள்ளதை கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அஜித்குமார் மற்றும் அவரது அணியினரின் சாதனைக்கு எனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.