தென்காசி: மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தென்காசியில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வந்தடைந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு சென்றேன். அந்த கோயில் இந்தியாவின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டானது.
வடக்கே எப்படி காசியோ அதேபோல் தெற்கே தென்காசி. அந்த கோயிலானது மிகவும் பழமையான ஒன்று. கோயிலின் பராமரிப்புக்காக செய்யப்படும் தூய்மைப் பணிகள் குறித்து தனக்குள் சில கேள்விகள் எழுந்தது. கோயிலின் பணம் எல்லாம் அரசுக்கு செல்கிறது. ஆனால் கோயிலின் பாதுகாப்பு மேம்பாட்டுக்கு என எதுவும் செய்வதாக தெரியவில்லை. இந்த கோயிலின் நிலை தமிழகத்தில் உள்ள அனைத்து கோயிலின் நிலையையும் காட்டுகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை டெங்கு மலேரியாவுடன் ஒப்பிட்டு பேசினார். திருமணம் உள்ளிட்ட அனைத்து சடங்குகளும் சனாதனமே. சனாதனத்தை எதிர்க்கும் அரசு வீழுமே தவிர சனாதனத்தை வீழ்த்த முடியாது. உலகம் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி மீது அதீத அன்பு வைத்துள்ளனர். அதிலும் தமிழக மக்கள் அதிக அன்பு வைத்துள்ளனர். மோடி செல்லும் இடங்களில் எல்லாம் தமிழை உயர்த்தும் விதமாக பேசி வருகிறார். குறிப்பாக ஜக்கிய நாடு சபையில் தமிழை உயர்த்தி பேசினார் மோடி.