தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்தவர்கள் சுந்தர், இசக்கிமுத்து. இவர்கள் இருவரும் இணைந்து மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்திற்கு எதிரே அன்னை நைட் கிளப் என்ற இரவு நேர உணவகத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடையின் வியாபாரத்தை பெருக்கும் விதமாக சினிமா பாணியில் பரோட்டா சாப்பிடும் பந்தயம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், 32 பரோட்டாக்களை ஒருவர் சாப்பிட்டால் சாப்பிட்ட பரோட்டாவிற்கு பணம் செலுத்த வேண்டாம். மாறாக, கடையின் உரிமையாளர் அந்த 32 பரோட்டாவிற்கான பணத்தை சாப்பிட்டவருக்கு தருவார். அதை சாப்பிட முடியாதவர்கள் எத்தனை பரோட்டா சாப்பிட்டார்களோ, அந்த பரோட்டாவிற்கு பணம் செலுத்த வேண்டும் என்று போஸ்டர் அடித்து ஓட்டியுள்ளனர். இந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து உரிமையாளர்கள் கூறுகையில், "நாங்கள் முதலில் பாஸ்ட்புட் உணவுகளை தான் விற்பனை செய்து வந்தோம். தொடர்ந்து வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இனங்க பரோட்டாவை தொடங்கினோம். அதில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அப்போது தான் பரோட்டா சூரி அண்ணன் காமெடி நினைவுக்கு வந்தது. அதை வைத்து ஏதாவது வித்தியாசமாக உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம். அப்படி உருவானது தான் இந்த 32 பரோட்டா போட்டி.