செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒழலூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வேலன் (31). இவருக்கு ஆர்த்தி (30) என்கிற மனைவியும், 11 வயது மகளும், 7 வயது மகனும் உள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவன் - மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக, ஆர்த்தி தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவர்களின் பிள்ளைகள் ஒழலூர் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் முறையே 6ஆம் வகுப்பும், 2 ஆம் வகுப்பும் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அக்கா, தம்பி இருவரும் இன்று( ஜூலை 8) காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற நிலையில், மதியம் உணவு இடைவேளையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் காரில் இரண்டு பேரையும் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.