சென்னை:சென்னையில் வேலைத்தேடி வரும் சில பெண்களிடம் தனியார் நிறுவனத்தில் நல்ல வேலை மற்றும் அதிக ஊதியம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தை கூறி சில கும்பல் கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் ஈடுபடுத்தும் குற்றச் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது.
இதனைத் தடுக்க காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு, கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வடபழனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்புப் பிரிவு-2 (Immoral Traffic Prevention Unit ITPU-2) காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், வடபழனி, வடக்கு மாட வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை ஒன்றை தீவிரமாக கண்காணித்த போது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருவதை போலீசார் உறுதி செய்தனர்.