தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை தி.நகரில் ஏணியை தள்ளிச் சென்ற போது மின்சாரம் தாக்கி இருவர் பலி! - மின்சாரம் தாக்கி பலி

Electric shock: சென்னை தியாகராய நகர் அருகே வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

electric shock
electric shock

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 3:07 PM IST

சென்னை:சென்னை தி.நகர் ராஜமன்னார் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வெள்ளை அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 25 அடி கொண்ட அலுமினிய ஏணியை அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனைக் குடியிருப்புக்குப் பின்புறம் தள்ளிக் கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராவிதமாக ஏணியின் மேற்புற முனை அங்கே இருந்த ட்ரான்ஸ்பார்ம் ஒயரில் பட்டு, மின்கசிவு ஏற்பட்டடுள்ளது. இதில் ஏணியை தள்ளிக் கொண்டு சென்ற திருவெற்றியூரைச் சேர்ந்த 33 வயதுடைய நாராயணன் மற்றும் பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த 32 வயதுடைய சிவகுமார் ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியாகினர்.

இதனையடுத்து அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பாண்டி பஜார் போலீசாருக்கு தகவல் கொடுத்ததுள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பாண்டி பஜார் காவல் நிலைய போலீசார், இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னை: தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. மோப்ப நாய்களுடன் அதிரடி சோதனை!

ABOUT THE AUTHOR

...view details