சென்னை:பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(32). இவர் தனது நண்பர் ஜெயக்குமார் என்பவருடன் இணைந்து சென்னீர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வார்டுகளில் டிராக்டர் மூலம் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளை சில வாரங்களாக செய்து வந்தனர்.
இந்த நிலையில் சென்னீர்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் சேர்ந்த கோட்டீஸ்வரி அன்பு. இவரது மருமகன் மணிகண்டன்(35), அதே பகுதியில் சில வருடங்களாக டிராக்டர் மூலம் குடியிருப்புகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வருவதாகவும், தற்போது வெங்கடேசன் டிராக்டர் மூலம் தண்ணீர் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்து நிலையில், இருவருக்கும் மத்தியில் பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அலுவலகத்தில் இருந்த வெங்கடேசனை, மணிகண்டனின் மற்றும் அவரது நண்பர்கள் சென்று வெங்கடேசன் மற்றும் ஜெயக்குமாரை நேற்று முன்தினம் கத்தியால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதில் காயம் அடைந்த இருவரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.