சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு சென்னை பெருநகரில் போதைப்பொருள்களை கடத்தி விற்பனை செய்து வரும் நபர்களை கண்டுப்பிடித்து தனிப்படை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக D-2 அண்ணாசாலை காவல் நிலையத்தின் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கடந்த 9ம் தேதி மெத்தப்பெட்டமைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்த கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சீரியல் நடிகை எஸ்தர் (எ) மீனா என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 5 கிராம் மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட எஸ்தர் (எ) மீனா அளித்த தகவலின் பேரில், இவருக்கு மெத்தப்பெட்டமைன் சப்ளை செய்த பதிஜா பவன் (எ) ஜேம்ஸ் (29), டோசன் ஜோசப் (28) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 19 கிராம் மெத்தப்பெட்டமைன், 99 கிராம் கஞ்சா பேஸ்ட் மற்றும் கிரீம், 95 மில்லி கஞ்சா ஆயில், 12 போதை மாத்திரைகள் ஆகியவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.