ஒரத்தநாடு:தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிலரால் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டார். இது குறித்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் மற்றும் 17 வயதுடைய சிறுவன் என மொத்தம் 4 பேரை கைது செய்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக அரசியல் கட்சிகள், வணிகர்கள் உட்பட பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அப்போது, இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்கள் மீதும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிக்கு தண்டனை பெற்று தரவேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.