தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகனை விட்டு நண்பனின் கழுத்தறுக்க செய்த நபர்.. கோத்தகிரியில் பயங்கரம்.. கைதான இருவருக்கு சிறை! - KOTAGIRI MURDER ATTEMPT

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், வீட்டு வாடகை பிரச்சனையில் நண்பனும், நண்பருடைய மகனும் சேர்ந்து மற்றொரு நண்பனின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைதான தந்தை, மகன்
கைதான தந்தை, மகன் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2024, 12:41 PM IST

நீலகிரி: கன்னியாகுமரி மாவட்டம் மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஸ்டான்லி ராய் (38). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

அங்கு இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்த நிலையில், கடந்த ஆறு மாதம் முன்பு கோத்தகிரி மாலிஸ் லைன் பகுதியை சேர்ந்த தேவதாஸ் என்பவர் ஸ்டான்லி ராய்க்கு அறிமுகமாகியுள்ளார்.

இருவரும் நண்பர்கள் ஆன பின்பு கோத்தகிரி கோவில் மேடு பகுதியில் உள்ள பிரபு என்பவரது வீட்டை ஒன்றாக சேர்ந்து வாடகைக்கு எடுத்து அதில் குடியிருந்தவாறு பணி செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஸ்டான்லி ராய் சொந்த வேலை நிமிர்த்தமாக தனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்று விட்டு இரண்டு நாட்கள் முன்பு மீண்டும் கோத்தகிரிக்கு வந்துள்ளார்.

அப்போது தேவதாஸ் வாடகைக்கு எடுத்த வீட்டில் இருந்துள்ளார். தேவதாசும் ஸ்டான்லி ராயும் வீட்டு வாடகை பாதி பாதியாக கட்டி வந்த நிலையில், சொந்த ஊரிலிருந்து திரும்பி வந்த ஸ்டான்லி ராயிடம் தேவதாஸ் வாடகை பணத்தை கேட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஆயிரம் கிலோ வெடிமருந்துடன் அசால்ட்டாக வந்த லாரி.. சீர்காழி அருகே பரபரப்பு!

அப்போது, இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வெளியே சென்ற தேவதாஸ் நள்ளிரவு 12.30 மணிக்கு அவருடைய மகன் நிவாஸ் ஆகிய இருவரும் வந்து ஸ்டான்லி ராயிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்டான்லி ராயை தேவதாஸ் பின்பக்கமாக பிடித்துக் கொள்ளவே தேவதாஸ் மகன் நிவாஸ் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஸ்டான்லி ராயின் கழுத்தில் அறுத்ததாக கூறப்படுகிறது.

வலி தாங்க முடியாமல் ஸ்டான்லி ராய் கூச்சலிடவே ஸ்டான்லி ராயின் மற்றொரு நண்பன் அங்கு வர, தேவதாசும், நிவாசும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தலைமறைவு ஆகிவிட்டனர். இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாரின் பெயரில், அங்கு விரைந்த காவல்துறையினர் கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்த ஸ்டான்லி ராயை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் முதற்கட்ட சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், தகவல் அறிந்த கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் வனக்குமார் மற்றும் காவல்துறையினர் நேற்று இரவு 12 மணிக்கு சம்பவம் நடந்த பின்பு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அதிகாலை 3 மணி அளவில் தேவதாஸ் மற்றும் அவரது மகன் நிவாஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் கோத்தகிரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தி குன்னூர் கிளை சிறையில் இருவரையும் அடைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details