சென்னை: நடைபெற்று முடிந்த 18வது நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தம் 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் ஆட்சியமைக்க பெரும்பான்மையாக 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றிப் பெற்ற அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்களும் ஜூன் 24, 25 ஆம் தேதிகளில் பதவியேற்று கொண்டனர். இதற்கிடையே, பாஜகவுக்கு அடுத்தபடியாக அதிக எம்.பி.க்களை கொண்டுள்ள காங்கிரஸ், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. அத்துடன், ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.