திருச்சி: திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் 67 வது பிறந்த நாளை முன்னிட்டு, கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்க வருகை தந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் மத்திய அமைச்சரவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஒப்புதல் வழங்கியிருப்பது குறித்த கேள்விக்கு, '' ஒரே நாடு ஒரே தேர்தல் தற்போது சாத்தியமா என்று தெரியவில்லை. எனவே, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்றார்.
வெள்ளம் நிவாரண பணி
தொடர்ந்து பேசியவர், '' வெள்ள நிவாரண பணியில் திமுகவின் நடவடிக்கையில் விளம்பரம் தான் இருக்கிறது. சொல்லிக் கொள்ளும் அளவிற்கு திமுக அரசின் செயல்பாடு இல்லை.
அதிமுக பொதுக் குழு
எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சியாக எப்படி செயல்படுகிறார் என்பதை குறித்து நான் சொல்ல முடியாது. நடைபெற்ற பொதுக் குழுவில் நாம் மீண்டும் வெல்வோம் என எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். அவர் என்ன வேண்டுமானாலும் பேசுவார் அவருக்கு தெரிந்ததெல்லாம் துரோகம் தான், அவருடன் சேர்ந்தவர் எல்லோருக்கும் துரோகம் தான் செய்துள்ளார்.
திமுக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான் காரணம். பாராளுமன்ற தேர்தலில் திமுக 40 தொகுதிகள் வெற்றி பெற்றது என்றால் அது எடப்பாடி பழனிசாமி தனியாக ஆட்களை நிறுத்தியதால் தான். இரட்டை இலை விவகாரம் மறைமுகமாக திமுக வெற்றிக்கு பழனிசாமியின் மூலம் உதவியாக இருக்கிறது. ஜனநாயக ரீதியாக நாங்கள் இரட்டை இலையையும், கட்சியையும் மீட்டெடுப்போம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கட்சியும், இரட்டை இலை சின்னமம் இன்று பலவீனமாகிவிட்டது.
இதையும் படிங்க:“அம்பேத்கருக்கு நினைவிடம்... அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தாக்குதல்! இதுதான் பாஜக..” திருமா காட்டம்!
கட்சிக்கு முடிவுரை
2026 தேர்தலில் ஜெயலலிதா உருவாக்கிய கட்சிக்கு (அதிமுக) எடப்பாடி பழனிசாமி முடிவுரை எழுதி விடுவார். 2026 தேர்தலுக்குப் பிறகு கட்சியே இல்லாத அளவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்து விடுவார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதால், கைது செய்யப்படுவோம் என்பதற்காக தன்னை, குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக திமுகவுக்கு மறைமுகமாக உதவி செய்து வருகிறார். 2026க்கு பிறகு அவரது உதவி திமுகவுக்கு தேவைப்படாது.
தேசிய ஜனநாயக கூட்டணி இன்னும் வலு பெறும்
திமுக என்ற தீய சக்தி ஆட்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி மக்களுக்கு நல்ல ஒரு ஆட்சியை கொடுக்கும் என்று உறுதியாக பணியாற்றி வருகிறோம். பொதுவாக குறைந்தபட்சம் 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதுதான் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எதிர்பார்ப்பு. அதனை இந்த அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை.
திருமாவளவன்