தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐபிஎஸ் பற்றி பேசும் சீமானுக்கு என்ன கல்வி தகுதி இருக்கு..? டிஐஜி வருண்குமாரின் வழக்கறிஞர் கேள்வி..! - VARUN KUMAR IPS VS SEEMAN

ஐபிஎஸ்-ஐ விட பெரிய படிப்பு ஒன்று உள்ளதா? நாம் தமிழர் சீமானுக்கு கல்வி தகுதி என்ன என்று டிஐஜி வருண்குமாரின் வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வழக்கறிஞருடன் டிஐஜி வருண்குமார், சீமான் (கோப்புப்படம்)
வழக்கறிஞருடன் டிஐஜி வருண்குமார், சீமான் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2025, 8:17 PM IST

திருச்சி: நாம் தமிழர் கட்சி சீமானுக்கும், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த வருண்குமாருக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் அரசியல் கட்சி தலைவர் மீது தனிப்பட்ட குற்றசாட்டுகளை பொதுவெளியில் வைத்து வருவதும், அதற்கு சீமான் எதிர்க்கட்சி தலைவர்களை எதிர்ப்பதை போல காவல்துறை அதிகாரி வருண்குமாரை சாடி வருவதும் வியப்பாகவே பார்க்கப்படுகிறது. தற்போது வருண்குமார் டிஐஜி-யாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக டிஐஜி-யாக உள்ளார்.

இந்நிலையில், டி.ஐ.ஜி வருண்குமார், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை அவதூறாக பேசி வலைத்தளங்களில் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து பதிவிட்டு வந்ததாகவும், சீமான் வருண்குமாரை அவதூறாக பேசியது தொடர்பாகவும் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வருண்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், அண்மையில் இதுதொடர்பாக பேட்டியளித்த வருண்குமார், '' சீமான் என்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒரு தொழிலதிபர் மூலம் முயற்சி செய்தார். ஆனால், நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை'' என்றார். இதற்கு அப்போது எதிர்வினையாற்றிய சீமான், '' நான் சென்று மன்னிப்பு கேட்கும் அளவுக்கு ஐ.பி.எஸ்.அதிகாரி வருண்குமார் ஒன்றும் பெரிய ஆளில்லை'' என்றார்.

இதையும் படிங்க:"சீமான் என்னிடம் மன்னிப்பு கேட்க முயன்றார்"; திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேட்டி..!

இந்த நிலையில், வருண்குமார் மனு மீதான விசாரணை இன்று (ஜன.07) குற்றவியல் நீதிமன்றம் எண் நான்கில் வந்தது. அப்போது, டிஐஜி வருண்குமார் ஆஜரானார். மேலும், இரண்டு பேர் வந்து சாட்சியம் அளித்தனர்.

வருண்குமார் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு அவரது வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் பொழுது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் மீண்டும் கீழ்த்தரமான முறையில் டிஐஜி வருண்குமார் குறித்து பேசி வருகிறார். சீமானுக்கு அடிப்படை நாகரீகம் கூட தெரியவில்லை. ஐபிஎஸ் என்பது மிகவும் உயர்ந்த பதவி. அதை சாதாரண பதவி போல் குறிப்பிட்டு விமர்சித்து பேசுகிறார். ஐபிஎஸ் படிப்பை பற்றி விமர்சிப்பதற்கு சீமானுக்கு என்ன கல்வி தகுதி இருக்கிறது? இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவோம்'' என தெரிவித்தார்.

மேலும், டிஐஜி வருண்குமார் சார்பில் இரண்டு பேர் சாட்சியம் அளித்த போது, சாட்சிகளை நீதிபதி பாலாஜி விசாரித்தார் என்றும் அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற நிலையில் மீண்டும் வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details