தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழைய பஸ் பாஸ் கொண்டு பயணம் செய்யலாம்.. மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு! - School Bus pass

School Bus Pass: 2024-2025 கல்வியாண்டில் பழைய பயண அட்டையைக் காண்பித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Bus
அரசுப் பேருந்து (Credits - MTC Chennai 'X' Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 9:56 PM IST

சென்னை: கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், வருகிற ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஜுன் 10, 2024 அன்று பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு, 2024-25 கல்வியாண்டில் மாணவ, மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை வழங்குவதில் உள்ள கால அளவினை கருத்தில் கொண்டு, மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் மாநகர் போக்குவரத்து கழகத்தால் 2023-24இல் வழங்கப்பட்ட பயண அட்டை, பள்ளி மாணவ, மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து, தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் சென்று வருவதற்கு, அதே போன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவியர்கள் 2023-24 ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அல்லது தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து கட்டணமில்லா பயண அட்டையினை இம்மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி துவங்கும் அல்லது முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ, மாணவியர்களை பாதுகாப்பாக ஏற்றி இறக்கிச் செல்ல அனைத்து மாநகர போக்குவரத்து கழக நடத்துநர் அல்லது ஓட்டுநர்களுக்கும் தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஜூன் 6-ல் பள்ளிகள் திறப்பு..'பள்ளிகள் திறப்பதற்கு முன்பே தூய்மை பணிகளை முடிக்கவும்' - பள்ளிக்கல்வித்துறை

ABOUT THE AUTHOR

...view details