ராணிப்பேட்டை:கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அரக்கோணம் வழியாக நாள்தோறும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில், எக்ஸ்பிரஸ் ரயில் இன்றும் வழக்கம்போல் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு காலை 8.50 மணிக்கு வந்து இரண்டு நிமிடங்கள் நின்று புறப்பட்டுச் சென்றது.
இந்த நிலையில், அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புளியமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் செல்லும்போது பச்சைக்கொடி காண்பிக்கும் ரயில்வே ஊழியர் ஒருவர், தண்டவாளம் உடைந்து இருப்பதைக் கவனித்து அலறி கூச்சலிட்டார். அதனை ரயில் என்ஜின் லோகோ பைலட் கவனிக்காததால், ரயில் இன்ஜின் மற்றும் முன்பதிவு இல்லாத பெட்டி என ஏசி பெட்டிகள் கடந்ததுள்ளது.
இருப்பினும், ரயில்வே ஊழியர் தொடர்ந்து அலறி கூச்சலிட்டதால், S1 கோச்சிலிருந்த பயணிகள் அவரது அலறல் சத்தம் கேட்டு அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்ததால், ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் ரயில் இன்ஜின் லோகோ பைலட் மற்றும் கார்டு ஆகியோருக்கு தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.