தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘காவலர்’ ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்திற்கு ரூ.500 அபாராதம்.. சென்னையில் அதிரடி நடவடிக்கை! - Vehicle Sticker Fine

Vehicle Sticker Fine: வேப்பேரி சாலையில் காவலர் என ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்திற்கு ரூ.500 அபாராதம் விதித்த போக்குவரத்து காவல் ஆய்வாளர், அடுத்த முறை ஸ்டிக்கரை எடுக்காமல் இருந்தால் ரு.1,500 அபராதம் வசூலிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Vehicle Sticker Fine
Vehicle Sticker Fine

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2024, 3:20 PM IST

சென்னை: சென்னை பெருநகர வாகனங்களில் நம்பர் பிளேட் மற்றும் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், இன்று (வியாழக்கிழமை) முதல் இந்த நடைமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக செல்லக்கூடிய போலீசார் வாகனங்களில், சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த காவலரை ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என போக்குவரத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக, இன்று போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிச் செல்லும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் கண்காணித்து, அவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டியவேலு பேசியதாவது, “கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. இதில், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை என எந்த ஒரு ஸ்டிக்கரையும், வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டில் ஒட்டக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, வாகனங்களில் இருக்கக்கூடிய நம்பர் பிளேட்டில் எந்த ஒரு ஸ்டிக்கரையும் ஒட்டக்கூடாது. வாகனத்தில் இருக்கக்கூடிய நம்பர் பிளேட் தெளிவாக தெரிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அனைத்து துறை ஸ்டிக்கர்களும் குறித்து அடுத்த அறிவிப்பு வந்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை போலீசார் சார்பில் மேற்கொள்ளப்படும். இருப்பினும், பல பேர் நம்பர் பிளேட்டில் உள்ள வாகன ஸ்டிக்கரை எடுத்து விட்டனர்.

தற்பொழுது அரை மணி நேரமாக இங்கு நிற்கின்றோம். இரண்டு வாகனங்களில் மட்டும்தான் காவலர் என ஸ்டிக்கர் ஒட்டி வந்துள்ளது. மேலும், ஒரு சில நபர்களுக்கு வாகன நம்பர் பிளேட் ஸ்டிக்கர் விவகாரம் தெரியாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு எடுத்துரைத்து அறிவுரைகளை வழங்கி, ஸ்டிக்கரை அவர்களே அடுத்தபடியாக எடுக்குமாறு கூறியுள்ளோம்.

முதல் முறையாக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வாகனத்தில் உள்ள ஸ்டிக்கரை எடுக்காமல் இருந்தால், மீண்டும் அடுத்த இடத்தில் போக்குவரத்து போலீசார் மூலம் பிடிக்கப்படும் பொழுது, அந்த வாகனத்திற்கு ரூ.1,500 அபராதமாக வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளோம். வாகன நம்பர் பிளேட் ஸ்டிக்கர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக, காவல் துறை வாகனத்தில் இருந்து நாங்கள் இந்த நடைமுறையை ஆரம்பித்திருக்கிறோம்.

மேலும், போக்குவரத்து போலீசார் நம்பர் பிளேட் உள்ள ஸ்டிக்கர்களை அகற்ற போலீசாருக்கு அதிகாரம் இல்லை. இந்த சோதனைக்கு காவல்துறையினர் அனைவரும் ஒத்துழைப்பு தருகின்றனர். இந்த நடைமுறையில் அரசு என்ன சொல்கிறதோ, அதை அடுத்த கட்டமாக செய்ய உள்ளோம்.

அதைத் தொடர்ந்து, நாங்கள் நடவடிக்கை எடுப்போம். குற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள் கூட அந்த ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு வாகனத்தில் செல்கின்றனர். காவல்துறையிடம் இருந்து தற்காத்துக் கொள்ள அவர்கள் இப்படி செய்கின்றனர்” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க:கொளுத்தும் வெயில்.. கோடைகால தீ முதல் கேஸ் சிலிண்டர் வரை.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன? - Awareness Of Fire Accident

ABOUT THE AUTHOR

...view details