நீலகிரி: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம், உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ள மாவட்டமாகும். குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவைக் காண, நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், பல்வேறு நாடுகளில் இருந்து அரிய வகை மலர்கள், மரங்கள், மூலிகைச் செடிகள் என நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள 'டோரியான்தஸ்' கற்றாழை குடும்பத்தைச் சேர்ந்த ஒரே பூக்கும் தாவரம் ஆகும். இது ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படுகிறது. இந்த தாவரம் 3 மீட்டர் முதல் 5 மீட்டர் உயரம் வரை வளரும். இது ஸ்கேப் எனப்படும் பூக்கும் தண்டு கொண்டது.