கோயம்புத்தூர்:கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் கோவை, நீலகிரி மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் போக்குவரத்து ஊழியர் சங்கம், டாஸ்மாக் ஊழியர் சங்கம், மின்சார ஊழியர் சங்கம், ஆட்டோ ஓட்டுநர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, தொ.மு.ச போக்குவரத்து தொழிற் சங்கத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் திடீரென தற்கொலைக்கு முயன்றார்.