திருவண்ணாமலை: பிப்ரவரி 24ஆம் தேதி சனிக்கிழமை பௌர்ணமி மற்றும் பிப்ரவரி 25ஆம் தேதி ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு, பிப்.23 முதல் பிப்.25ஆம் தேதி வரை சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும், இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது. அதாவது, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு பிப்ரவரி 23ஆம் தேதியன்று 730 பேருந்துகளும், பிப்ரவரி 24ஆம் தேதியன்று 640 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு பிப்ரவரி 23ஆம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) 80 பேருந்துகளும் மற்றும் பிப்ரவரி 24ஆம் தேதியன்று (சனிக்கிழமை) 80 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 23ஆம் தேதி 810 சிறப்பு பேருந்துகளும், 24ஆம் தேதி 720 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும், பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.