சென்னை:தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6,244 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்து தேர்வு கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை எழுத மொத்தம் 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பிருந்த நிலையில்,15 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் தேர்வெழுதி உள்ளனர் எனவும், 4 லட்சத்து 45 ஆயிரத்து 115 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த தேர்வுக்கான காலி பணியிடங்கள் எண்ணிக்கை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது மேலே குறிப்பிட்டுள்ள 6244 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.