தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்செந்தூர் கடற்கரையில் சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு! - TUT KOIL

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் தொடர் கடல் அரிப்பு ஏற்படும் நிலையில் சென்னை ஐஐடி குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

திருச்செந்தூர் கடற்கரையில் சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு
திருச்செந்தூர் கடற்கரையில் சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 22, 2025, 1:01 PM IST

திருச்செந்தூர்: தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில். இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். பக்தர்கள் கோயில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வார்கள்.

மேலும் பௌர்ணமி நாட்களில் கோயில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள். இந்த நிலையில் தொடர்ந்து கோயில் கடற்கரையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. கடல் சீற்றத்தின் காரணமாக கோயில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுமார் 20 அடி நீளத்திற்கு 8 அடி ஆழத்திற்கு இந்த கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பக்தர்கள் கடற்கரையில் கோயில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் படிக்கட்டுகள் பகுதியில் தகரம் மற்றும் தடுப்புவேலிகள் கொண்டு பக்தர்கள் இறங்காதவாறு அடைக்கப்பட்டுள்ளது. கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் பாறைகள் மற்றும் பெரிய அளவிலான கற்கள் வெளியே தெரிகின்றன.

இதனால் கடலில் நீராடும் பக்தர்களுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே கடல் அரிப்பை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கடற்கரையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து சென்னை ஐஐடி குழுவினர் கடற்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்..

இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்புள்ள கடற்கரையில் சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் இருந்து அமலிநகர் வரை கடல் அரிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். டிஜிபிஎஸ் உள்ளிட்ட நவீன கருவி மூலம் திருச்செந்தூர் கடற்கரையில் கடலின் ஆழம் எவ்வளவு? என்பது பற்றி அவர்கள் அறிந்தனர். மேலும் கடல் நீரால் ஏற்பட்டுள்ள மணல் அரிப்பு எவ்வளவு தூரம்? என்பதையும், தரை மட்டத்தை எவ்வளவு தொலைவுக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது? கடல் மணல் சரிவு எவ்வளவு? என்பது பற்றியும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுக்குப் பின் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. அதைத் தொடர்ந்து திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரியவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details