தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்.எல்.ஏ - எம்.பிகள் மீது உள்ள கிரிமினல் மற்றும் ஊழல் வழக்குகள் எத்தனை? - TN MP and MLA criminal Cases

Criminal and Corruption cases against TN MP, MLA's: தமிழகம் முழுவதும் எம்.எல்.ஏ - எம்.பி-களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் 561 வழக்குகளும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 வழக்குகளும் உள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tn-state-tells-to-madras-high-court-total-560-criminal-charges-against-mp-and-mla
எம்.எல்.ஏ - எம்.பிகள் மீது உள்ள கிரிமினல் மற்றும் ஊழல் வழக்குகள் எத்தனை? தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 4:59 PM IST

சென்னை: தமிழகம் முழுவதும் எம்.எல்.ஏ. - எம்.பிகளுக்கு எதிராக இந்தியத் தண்டனைச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் 561 வழக்குகளும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 வழக்குகளும் உள்ளதாகத் தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி - எம்.எல்.ஏக்களுக்கு எதிராகச் சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விசாரணையைக் கண்காணிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

கடந்த முறை இந்த வழக்கில், தமிழகம் முழுவதும் எம்.பி - எம்.எல்.ஏக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களையும், அந்த வழக்குகளின் விசாரணை நிலை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (ஏப்ரல்.02) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள எம்.பி - எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளின் விவரங்கள் அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், மாநிலம் முழுவதும் எம்.எல்.ஏ - எம்.பிகளுக்கு எதிராக, இந்தியத் தண்டனைச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட 561 வழக்குகள் நிலுவையில் உள்ளன எனவும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 வழக்குகள் உள்ளதாகவும், அதில் 9 வழக்குகள் சாட்சி விசாரணை முடியும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக உள்ள வழக்குகளில் விரைந்து குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புலன் விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட அறிக்கை தாக்கல் செய்வதற்காக வழக்கின் விசாரணையை ஜூன் 20ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:அதிமுக கூட்டணியில் இருந்து வந்த பிறகு ராஜ்யசபா எம்பி பதவியை தூக்கி வீசாமல் இருப்பது ஏன்? - அன்புமணியை விளாசிய விஷ்ணு பிரசாத்! - Congress Candidate MK Vishnu Prasad

ABOUT THE AUTHOR

...view details