தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி! - 10th exam results

10th Exam Result: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதன்படி, மொத்தம் 91.55 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ஆம் வகுப்பு மாணவர்கள் புகைப்படம்
10ஆம் வகுப்பு மாணவர்கள் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 9:31 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை, கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை, 4,107 மையங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 12 ஆயிரத்து 616 மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் படித்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினித்தவர் ஒருவர் என மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வெழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், தனித்தேர்வர்களாக 28 ஆயிரத்து 827 பேரும் எழுத அனுமதிக்கப்பட்டனர். சிறைவாசிகள் 235 பேரும் தேர்வினை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேது ராம வர்மா வெளியிட்டுள்ளார். இதன் அடிப்படையில், தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in அல்லது www.dge.tn.gov.in அல்லது https://results.digilocker.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். மேலும் பள்ளிகளில் மாணவர்கள் மதிப்பெண்களை பார்த்து தெரிந்து கொள்வதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் மதிப்பெண்களுடன் கூடிய பட்டியல்களும் அனுப்பப்பட்டுள்ளது. நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்.

இதையும் படிங்க:23 வகையான நாய்களுக்கு உடனே கருத்தடை செய்க; தமிழக அரசு அதிரடி உத்தரவு! - 23 Dogs Ban In Tamil Nadu

ABOUT THE AUTHOR

...view details