தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.150 இருந்தால் கொடைக்கானலை ஜாலியாக சுற்றிப்பார்க்கலாம்.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன? - Kodaikanal tourism - KODAIKANAL TOURISM

Kodaikanal Tourist: 150 ரூபாயில் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க, தமிழ்நாடு அரசு பேருந்து போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 4:15 PM IST

திண்டுக்கல்:மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தலமாகும். ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளையும் இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையையும் அனுபவித்து செல்வதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவது வழக்கம்.

குறிப்பாக, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும், கோடை காலங்களில் சமவெளி பகுதிகளில் சதத்தை அடித்து தாண்டும் வெயிலின் தாக்கம் தாளாமல் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலை நோக்கி படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ்(Manjummel Boys) என்ற மலையாள படத்தின் தாக்கத்தினால் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருகின்றனர்.

இன்று முதல் ஜூன் முதல் வாரம் வரை சுற்றுலா பயணிகள் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு 150 ரூபாயில் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க, தமிழ்நாடு அரசு பேருந்து போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை, அப்பர் லேக் வியூ, சைலன்ட் வேலி உள்ளிட்ட 12 சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கு பெரியோர்களுக்கு 150 ரூபாயும், 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 75 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. காலையில் 9:00 மணி முதல் கூட்டத்தை பொறுத்து சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

காலை வேளையில் புறப்படும் இந்த சுற்றுலா பேருந்து சுற்றுலாப் பயணிகளின் கடும் கூட்டத்திலும் சுற்றுலாத்தலங்களை சுற்றி வருகிறது. பட்ஜெட் பயணமாக வரக்கூடியவர்களுக்கு இந்த 150 ரூபாய் பேருந்து பயணம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது என சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதே போன்று சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு சில நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்தக் கோடை சீசன் மட்டுமல்லாது இதுபோன்ற மற்ற கூட்ட நாட்களிலும், திருவிழா நாட்களிலும் இதுபோன்ற வசதியை கையில் எடுக்க வேண்டும் என பேருந்து பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:கோடை விடுமுறை எதிரொலி; சீசனை அனுபவிக்க உதகையில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்! - Kodai Season In Ooty

ABOUT THE AUTHOR

...view details