தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வன உயிரின ஆர்வலருக்கு டாக்டர் ஏ.ஜே.டி ஜான்சிங் விருது - அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு! - AJT Johnsingh Award - AJT JOHNSINGH AWARD

TN Forest Department: தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு, வருடத்திற்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் ஆமை பாதுகாவலர்கள் குழு அமைக்கப்படும் என சுற்றுசூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.

அமைச்சர் மதிவேந்தன் புகைப்படம்
அமைச்சர் மதிவேந்தன் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 3:44 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது வனத்துறை சார்பில், இரவு வான் பூங்கா, ஆமை பாதுகாவலர்கள் குழு, முதலைகள் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட 10 புதிய அறிவிப்புகளை காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்டுள்ளார்.

சூழல் சுற்றுலா மேம்பாடு:மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளையில் உள்ள சமூக அடிப்படையிலான அமைப்புகள் மூலம் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவில், சமூக அடிப்படையிலான சூழல் சுற்றுலா ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

இன விதை பெட்டகம்: கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வன உயர்பயிற்சியக மரபியல் பிரிவில் பூர்வீக இன விதை பெட்டகம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

தமிழ்நாடு மரங்கள் (அரசு நிலங்கள்) பாதுகாப்புச் சட்டம் 2024 அறிவிக்கை செய்யப்படும். தமிழ்நாடு மாநில வனக் கொள்கை 2024 வெளியிடப்படும்.

டாக்டர் ஏஜேடி ஜான்சிங் வன உயிரினப் பாதுகாப்பு விருது: வன உயிரின பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை அளித்த வன உயிரின ஆர்வலர் ஒருவருக்கு டாக்டர் ஏ ஜே டி ஜான்சிங் (A. J. T. Johnsingh) வன உயிரினப் பாதுகாப்பு விருது ரூ.25 லட்சம் பரிசுத்தொகையுடன் வழங்கப்படும்.

இரவு வான் பூங்கா: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் இரவு வான் பூங்கா அமைக்கப்படும்.

ஆமை பாதுகாவலர்கள் குழு:தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு. வருடத்திற்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் ஆமை பாதுகாவலர்கள் குழு அமைக்கப்படும்.

முதலைகள் பாதுகாப்பு மையம்: தஞ்சாவூர் கோட்டம் கும்பகோணம் சரகம், அணைக்கரையில் முதலைகள் பாதுகாப்பு மையம் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

ஆர்கிடேரியங்கள் மேம்பாடு:கூடலூர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆர்கிடேரியங்கள் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

மலையேற்ற வழித்தடங்கள் மேம்பாடு:தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் உள்ள மலையேற்ற வழித்தடங்களுக்கான வரைபட புத்தகங்கள் உருவாக்கப்படுவதுடன், அத்தடங்களின் அடிப்படை வசதிகள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

இதையும் படிங்க:18 மாதங்களில் 75,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு! - TAMIL NADU ASSEMBLY

ABOUT THE AUTHOR

...view details