சென்னை:தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிஅனைத்து மாநில பல்கலைகழகங்களின் துணை வேந்தர்கள் கூட்டத்தைக் கூட்டி, மக்களவைத் தேர்தலில் முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்குகள் செலுத்துவதை உறுதிப்படுத்துவது குறித்து ஆளுநர் மாளிகையில் நேற்று (மார்ச் 11) ஆலோசனை நடத்தினார்.
இதில், முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அடுத்த 10 நாட்களுக்குள் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைப்பதை எளிமைப்படுத்தவும், இந்த முயற்சியில் என்.சி.சி மற்றும் என்.எஸ்.எஸ் தன்னார்வலர்களை ஈடுபடுத்தவும் வலியுறுத்தினார். அதோடு, வாக்களித்தவர்களுக்கு இணையவழி சான்றிதழ் கிடைப்பதற்கான செயலியை உருவாக்கவும், இதில் முனைப்புடன் செயலாற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.