வேலூர் :திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 19வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையேற்று பட்டங்களை வழங்கினார்.
இவ்விழாவில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டார். இவ்விழாவில் 86 பேர் முனைவர் பட்டம் பெற்றனர். 36 இளங்கலை மற்றும் 24 முதுகலை பாடப்பிரிவுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளுடன் பட்டங்கள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க :"ஒரே நாளில் 20 செ.மீ மழைக்கு வாய்ப்பு..பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்" - துணை முதல்வர் உதயநிதி!
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உள்ள 13 துறை சார்ந்த முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளுடன், பட்டங்கள் வழங்கப்பட்டது. மொத்தம் 28,417 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இவற்றில் 155 மாணவர்கள் நேரடியாகவும், 28,262 மாணவர்கள் ஆளில்லா முறையிலும் பட்டம் பெற்றனர்.
128 மாணவர்கள் முதுகலை பட்டயப்படிப்பிலும், 25 மாணவர்கள் பட்டயப்பிடிப்பிலும், 24,289 மாணவர்கள் இளங்கலையிலும், 3,785 மாணவர்கள் முதுகலையிலும், 35 மாணவர்கள் இளமுனைவர் (M.Phil) உட்பட மொத்தமாக 28,417 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இவ்விழாவில் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர்.முனைவர்.த.ஆறுமுகம் உட்பட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டானர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்