தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பி.இ., பி.டெக்., மாணவர் சேர்க்கை: உள் ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு எப்போது? - BE and BTech Couseling - BE AND BTECH COUSELING

BE and BTech Couseling: ஆதி திராவிடர்களில் அருந்ததியினருக்கான 3.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை (செப்.10) நடைபெறுகிறது என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 6:06 PM IST

சென்னை:2024-25ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் பிஇ , பிடெக் படிப்பில் இளங்கலையில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 376 இ்டங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி வழங்கி உள்ளது. அதில் ஒற்றை சாரள முறையிலான கலந்தாய்வில் தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் நிரப்புவதற்கு அனுமதிக்கப்பட்டது.

இதில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையில் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் ஜூலை 10 ந் தேதி வெளியிட்டப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி தேதி தொடங்கி செப்டம்பர் 3 ஆம் தேதி வரையில் நடைபெற்றது.

கடந்த செப். 6ஆம் தேதி தொடங்கிய நிலையில், 7ஆம் தேதி வரை விரும்பும் கல்லூரிகளில் மாணவர்கள் பதிவு செய்தனர். 8ஆம் தேதி தற்காலிக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று ( செப். 9) இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 441 மாணவர்களுக்கு கல்லூரிகளுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பொறியியல் படிப்பில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 50 ஆயிரத்து 542 இடங்கள் காலியாக உள்ளது என பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பொதுப்பிரிவு கலந்தாய்வின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 12 ஆயிரத்து 915 இடங்களும், பொதுப்பிரிவில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 780 இடங்களும் என 1 லட்சத்து 21 ஆயிரத்து 695 மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 50 ஆயிரத்து 542 இடங்கள் காலியாக உள்ளது . ஆதி திராவிடர்களில் அருந்தயினருக்கான 3.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்களுக்கு ஆதிதிராவிடர்கள் சேர்வதற்கான இட ஒதுக்கீடு கலந்தாய்வு நாளை (செப்.10) நடைபெறுகிறது என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:பொறியியல் மாணவர் சேர்க்கை: 101 கல்லூரிகளில் 25% க்கும் கீழ் தான் அட்மிஷன்; வெளியான அதிர்ச்சி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details