தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை - என்ன சொல்கிறார் கே.எஸ்.அழகிரி?

DMK-Congress MP Seat sharing discussion: திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுகவுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.

திமுக மற்றும் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டின் முதற்கட்ட பேச்சுவார்த்தை
திமுக மற்றும் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டின் முதற்கட்ட பேச்சுவார்த்தை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 6:31 PM IST

Updated : Jan 29, 2024, 7:06 PM IST

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜன. 28) நடைபெற்றது. இதில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவில் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் தரப்பில் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜோய் குமார், கே.எஸ்.அழகிரி, செல்வபெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் தொகுதி பங்கீடு தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் காங்கிரஸ் கட்சியினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பேசியதாவது, "திமுகவுடன் டெல்லியில் இருந்து காங்கிரஸ் தரப்பில் வந்த தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது. 40 தொகுதிகளிலும் எப்படி வெற்றி பெறுவது, பாஜக, அதிமுக-வை எப்படி வீழ்த்துவது என முதல்கட்ட பேச்சு வார்த்தையில் பேசப்பட்டது. மேலும் கூட்டணி கட்சிகளை எப்படி மகிழ்ச்சியாக வைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "21 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்ற செய்தி பொய்யானது என்று கூறியதையடுத்து, 21 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவதாக விருப்பம் தெரிவித்த செய்தி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து லீக் ஆனது தான் என செய்தியாளர்கள் கூறியதற்கு, "காமராஜர் கட்டிய கட்டிடம் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் லீக் ஆகாது" என்றார்.

அவரைத் தொடர்ந்து முகுல் வாஸ்னிக் பேசியதாவது, "கூடிய விரைவில் அடுத்தக்கட்ட சந்திப்பு நடைபெறும். இந்த சந்திப்பு நிறைவாக இருந்தது" எனத் தெரிவித்தார். நிதிஷ் குமார் பாஜகவில் இணைந்தது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, "பிரிவினை சக்திகளை எதிர்கொள்ள தைரியம் இல்லாதவர்கள் வெளியே செல்வார்கள்.

இந்தியா கூட்டணி இன்னும் ஒவ்வொரு நாளும் வலுவாக தான் மாறி வருகிறது. இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. இந்திய மக்கள் எங்கள் கூட்டணி பக்கம் தான் உள்ளனர்" எனத் தெரிவித்தார். முன்னதாக திமுக காங்கிரஸ் கட்சிகளிடையே அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி 14 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான பட்டியலை கொடுத்தாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தி.மு.க தலைமையிடம் பேசி மீண்டும் அழைப்பதாக திமுக கூட்டணி பேச்சு வார்த்தைக்குழு தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை - தொகுதி பங்கீடு பட்டியல் வெளியீடா? காங்கிரஸ் திட்டவட்ட மறுப்பு!

Last Updated : Jan 29, 2024, 7:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details