தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதல்வர் திறந்து வைத்த கட்டடம்: "ஸ்லாப் கட்டுமானம் சரியாக இல்லை"- அதிகாரிகளை கடிந்துகொண்ட கூடுதல் ஆட்சியர்! - BULIDING DAMAGE ISSUE

தமிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியக் கட்டடத்தை ஆய்வு மேற்கொண்ட கூடுதல் ஆட்சியர், கட்டடப் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என ஒப்பந்ததாரரை கடுமையாக கடிந்து கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புதிதாக திறக்கப்பட்ட கட்டடம், கூடுதல் ஆட்சியர் ஆய்வு
புதிதாக திறக்கப்பட்ட கட்டடம், கூடுதல் ஆட்சியர் ஆய்வு (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2024, 11:04 PM IST

புதுக்கோட்டை :புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவிலில் ரூ.3 கோடியே 61 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று( நவ 12) சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இதில் குன்றாண்டார்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருணா, கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து கட்டடத்தை ஆய்வு மேற்கொண்ட கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல், கட்டடப் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரை கடுமையாக கடிந்து கொண்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

கூடுதல் ஆட்சியர் அருணா ஆய்வு வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க :பதிவு திருமண சர்ச்சை விவகாரம்; "அறநிலையத் துறையின் நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன்" - பரமாச்சாரிய சுவாமிகள்!

அந்த வீடியோவில், கட்டடப் பணிகள் முறையாக செய்யப்படவில்லை. கட்டடத்தில் ஸ்லாப் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் கட்டுமானம் சரியாக இல்லை. இதை அதிகாரிகள் ஏன் ஆய்வு செய்யவில்லை? ஒப்பந்ததாரர் ஏன் இதை கவனிக்கவில்லை? என பல கேள்விகளை எழுப்பினார். இதற்கு அதிகாரிகள் சரி செய்து விடுவதாக கூறுகின்றனர். கட்டுமான பணிகளை முடித்த பிறகு எப்போது சரி பண்ண போகிறீர்கள்? என கடிந்து கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details