ETV Bharat / state

சேலம் ரயில் நிலையத்தில் பிறந்த குழந்தை...பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள்! - WOMAN DELIVERY RAILWAY STATION

நிறைமாத கர்ப்பிணி பிரசவத்திற்காக சொந்த ஊருக்கு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே திடீரென பிரசவ வலி ஏற்பட்டு சேலம் ரயில்வே நிலையத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதில், தாயும், சேயும் நலமாக உள்ளதாக மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.

சேலம் ரயில் நிலையத்தில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த  ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள்
சேலம் ரயில் நிலையத்தில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2025, 4:27 PM IST

சேலம்: கேரளாவில் இருந்து நிறைமாத கர்ப்பிணி பிரசவத்திற்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதில், அவர் ரயிலில் பயணம் செய்து் கொண்டிருக்குபோது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பெண்ணை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு பிரசவ வலி அதிகரித்ததால், சேலம் ரயில் நிலையத்தின் ஐந்தாவது நடமேடையிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை பிறந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூர்யா (23). இவருடைய மனைவி லைலா (வயது 20), இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவர்கள் இருவரும் கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், லைலா பிரசவத்திற்காக கேரளாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் (ஜனவரி 16) வியாழக்கிழமை நள்ளிரவு, அவரது கணவர் சூர்யாவுடன் ரயில் மூலம் புறப்பட்டு வந்துள்ளனர்.

இதில், ரயில் சேலம் அருகில் வந்தபோது, திடீரென லைலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் சூர்யா, இது குறித்து உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில், சேலம் ரயில்வே நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

சேலம் ரயில் நிலையத்தில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த  ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள்
சேலம் ரயில் நிலையத்தில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை? - போக்சோ வழக்கில் சிக்கிய காவலர்!

இதனையடுத்து, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் லைலா பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து அவரை ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் கண்ணன், ஓட்டுநர் வடிவேல் ஆகியோர், ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருந்துள்ளனர். இதில், லைலா ரயில் நிலையத்தின் ஐந்தாவது நடைமேடையில் அழைத்து வரப்பட்டபோது அவருக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது.

சேலம் ரயில் நிலையத்தில் பிறந்த குழந்தை
சேலம் ரயில் நிலையத்தில் பிறந்த குழந்தை (ETV Bharat Tamil Nadu)

இதையறிந்த ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் கண்ணன் மற்றும் ஓட்டுநர் வடிவேல் ஆகியோர், ஐந்தாவது நடைமேடையிலேயே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். இதில், அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும், தாயும், சேயும் நலமாக இருந்துள்ளனர். தற்போது தாயம், சேயும் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.