தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 19 இடங்களில் பேரிடர் நிவாரண முகாம்கள்.. சிவ்தாஸ் மீனா தகவல்! - Disaster relief camp - DISASTER RELIEF CAMP

Chennai Disaster relief camp: சென்னை மாநகராட்சியில் மொத்தம் 19 இடங்களில் நிவாரண முகாம்களும், மாநில அளவில் 4 இடங்களில் பிராந்திய (Regional) பேரிடர் மீட்பு மையங்களும் அமைக்கப்பட உள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

TN CHIEF SECRETARY SHIVDAS MEENA
TN CHIEF SECRETARY SHIVDAS MEENA (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 5:25 PM IST

சென்னை:சென்னை எழிலகத்தில் 5 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் கட்டுமானப் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று (சனிக்கிழமை) ஆய்வு செய்தார்.

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்த மையத்தில் பல்வகை பேரிடர் கண்காணிப்பு மற்றும் பேரிடர் தாக்கம் குறித்து முன்னறிவிப்பு செய்யும் வகையில் அமைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் பலதுறை சார்ந்தவர்களும் அமர்ந்து பணியாற்றும் வகையிலான வார் ரூம் அமைக்கப்பட உள்ளது. இக்கட்டிடப் பணிகள் மூன்று வாரத்திற்குள் நிறைவடையும்" என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசியவர், "இன்னும் இரண்டு வாரங்களில் துறை சார்ந்து கருத்தரங்கம் நடைபெற உள்ளது. வழக்கமாக மழை வரும் முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால், இம்முறை வெள்ளம் வந்ததாக கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். நீர் நிலைகளில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது? எவ்வளவு தண்ணீர் வரும்? எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் வர வாய்ப்பு இருக்கிறது என கணக்கிட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

மெட்ரோ ரயில் பணிகள்,மதுரவாயில் மேம்பாலம் பணி உள்ளிட்ட பெரிய வேலைகள் நடைபெறும் இடங்களில், மழை நீரை வெளியேற்றுவது குறித்து டெக்னிக்கல் ஆடிட் ரிப்போர்ட் பெற்று எங்கேனும் மழை நீர் வடிகால் கட்டமைப்பு விடுபட்டிருந்தால் அதனை சரி செய்ய அறிவுறுத்தப்படும். இப்பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 19 இடங்களில் பேரிடர் நிவாரண முகாம்களும்,மாநில அளவில் 4 இடங்களில் பிராந்திய ( Regional) பேரிடர் மீட்பு மையங்களும் அமைக்கப்பட உள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை உபகரணங்கள்,உணவு,மருந்து ஆகியவை தயார் நிலையில் அந்த இடங்களில் வைக்கப்படும்.

சென்னையின் மையப் பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. வடசென்னை பகுதியில் கொசஸ்தலை ஆறு மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 75 சதவிகிதம் பணிகள் முடிந்துள்ளது. மழைநீர் செல்வது தடைபடாத வகையில் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: “உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதற்கு முதலமைச்சர் தான் முடிவெடுப்பார்” - அமைச்சர் துரைமுருகன்! - Durai Murugan about Udhayanidhi

ABOUT THE AUTHOR

...view details