சென்னை:சென்னை திருவான்மியூர் பகுதியில் வீட்டு வசதி வாரியம் சார்பில் 1996 ஆம் ஆண்டு குறிஞ்சி, முல்லை, மருதம் போன்ற அடுக்குமாடி வகையில் 642 குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்யப்பட்டன. இந்த குடியிருப்புகளை கட்டி 30 ஆண்டுகள் ஆன சூழ்நிலையில் வீடுகள் அனைத்தும் தொடர்ந்து சிதலம் அடைந்த காரணத்தினால் பொதுமக்கள் வாழ முடியாத ஒரு சூழ்நிலை நிலவுகிறது. ஆகவே இந்த குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய குடியிருப்பில் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானாவிடம் கோரிகை வைத்தனர்.
ஆபத்தான நிலையில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள்! வரும் 12-ம் தேதி பேச்சுவார்த்தை என எம்எல்ஏ அசன் மௌலானா பேட்டி! - THIRUVANMIYUR TNHB
சென்னை திருவான்மியூர் குறிஞ்சி, முல்லை, மருதம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புவாசிகளுடன் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் வருகின்ற 12ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா தெரிவித்தார்.
![ஆபத்தான நிலையில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள்! வரும் 12-ம் தேதி பேச்சுவார்த்தை என எம்எல்ஏ அசன் மௌலானா பேட்டி! எம்எல்ஏ அசன் மௌலானா நேரில் ஆய்வு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/04-02-2025/1200-675-23473461-thumbnail-16x9-asan-moulana-aspera.jpg)
Published : Feb 4, 2025, 7:27 PM IST
இதனையடுத்து திருவான்மியூர் குறிஞ்சி, முல்லை அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிதாக கட்டித் தர வேண்டும் என வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா, சட்டப் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருந்தார். இந்த தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா முன்னிலையில் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் திருவான்மியூர் குறிஞ்சி, முல்லை அடுக்குமாடி குடியிருப்புகளின் தரத்தை இன்று ஆய்வு செய்தனர்.