தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பள்ளிகளில் வடமாநில குழந்தைகளுக்கு தமிழ்மொழி - பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு! - TAMIL

அரசுப் பள்ளிகளில் வடமாநில குழந்தைகளுக்கு தமிழ்மாெழியை கற்றுத் தர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் வடமாநில குழந்தைகளுக்கு தமிழ்மொழி
அரசுப் பள்ளிகளில் வடமாநில குழந்தைகளுக்கு தமிழ்மொழி (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2025, 3:47 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநிலத்தவரின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து தமிழ் மொழியை கற்றுத் தருவதுடன், அதிக மதிப்பெண் பெறும் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்குவிக்கவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வந்து வேலைப் பார்த்து வருகின்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளை வேலை பார்க்கும் பகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். மேலும் அவர்கள் வீடுகளில் தாய் மாெழியை பேசினாலும், அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் போது, தமிழ் மாெழியையும் படித்து வருகின்றனர்.

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் அதிகளவில் வடமாநிலத் தாெழிலாளர்கள் குடும்பத்துடன் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

வடமாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து தமிழ் மொழியை படிக்க வைக்கின்றனர். மாணவர்கள் விரும்பி படித்து நன்கு புலமை பெற்று வருகின்றனர். வடமாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழ்மொழியை பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பணிபுரிந்து வாழும் வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்கள் அரசு நடத்தும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் உதவி தொகை பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்த வேண்டும். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இதனை அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details