சென்னை :தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக போராட்டம் நடத்த திமுகவினருக்கு விதிகளை மீறி அனுமதியளித்ததாக சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பாஜக தாக்கல் செய்த மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்ல நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக பாஜக அறிவித்தது. ஆனால், போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. ஆனால், ஆளுநருக்கு எதிராக திமுகவினர் போராட்டம் நடத்த உடனடியாக அனுமதித்ததாக குற்றம் சாட்டி பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "கோயம்புத்தூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரையில் குஷ்பு , சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் போராட்டம் நடத்த காவல்துறையினரால் அனுமதி மறுத்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.