திருவண்ணாமலை:செங்கம் அடுத்த கோட்டங்கள் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் மற்றும் ஆனைமங்கலம் பகுதியைச் சேர்ந்த சத்தியா ஆகியோர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு காதலித்துள்ளனர். இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் காவல் நிலையத்தில் வைத்து பிரிந்துள்ளனர்.
இந்நிலையில் ராஜேஷுக்கு திருமண ஏற்பாடு நடப்பதாக தெரிகிறது. இதனை அறிந்த சத்தியா தனது சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் நேற்று இரவு ராஜேஷை கடத்த முயன்றதாகவும், அப்போது, ராஜேஷ் கார் ஓட்டுநரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது காரில் இருந்தவர்கள் அவரை குத்தியதாகவும் கூறப்படுகிறது.