தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருக்கார்த்திகை தீபத் திருவிழா: தி.மலை கோயிலில் தேர் செப்பனிடும் பணி தீவிரம்! - Tiruvannamalai Annamalaiyar Temple - TIRUVANNAMALAI ANNAMALAIYAR TEMPLE

Tiruvannamalai Annamalaiyar Temple Festival: திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் மாட வீதியில் வலம் வரவுள்ள தேர் செப்பனிடும் பணி தொடங்கி தீவிரமான நடைபெற்று வருகிறது.

தேர் செப்பனிடும் பணி
தேர் செப்பனிடும் பணி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 19, 2024, 12:47 PM IST

திருவண்ணாமலை:நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். இக்கோயிலில் உலகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றாக கருதக்கூடிய, கார்த்திகை மாதங்களில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

தி.மலை கோயிலில் தேர் செப்பனிடும் பணி தீவிரம் (Credits - ETV Bharat Tamil Nadu)

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் கிட்டத்தட்ட 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவைக் காண பல்வேறு மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து, அண்ணாமலையாரை தரிசிப்பதுடன் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலம் பாதையில் கிரிவலம் மேற்கொள்வது வழக்கம்.

அந்த வகையில், கார்த்திகை மாதத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கப்படும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின், 7ம் நாள் தேர் திருவிழா முக்கிய விழாவாக கருதப்படுகிறது. அதாவது, ஏழாம் நாளன்று மாட வீதியில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் என ஐந்து தேர்களும் ஒன்றன்பின் ஒன்றாக வலம் வருவர்.

சுமார் 300 டன் எடையும், 62 அடி உயரமும் கொண்ட ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய தேர் என்று அழைக்கக்கூடிய மகா ரதம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டதால், ஆண்டுக்கு ஒருமுறை அதனை செப்பனிட்டு மாட வீதியில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ரூ.50 லட்சம் மதிப்பில் கார்த்திகை தீபத்திற்கு முன்னதாக தேர் செப்பனிடும் பணியானது பொதுப்பணித் துறையினரால் துவங்கப்பட்டுள்ளது.

இதில், 62 அடி உயரம் கொண்ட தேரின் உச்சியில் கலசம் வைக்கப்பட்டுள்ளது முதல், மாடம் புதியதாக மாற்றி அமைப்பதுடன் 2 மற்றும் 4வது மாடங்கள் முழுமையாக பழுதுபார்க்கப்பட உள்ளன. தொடர்ந்து சுவாமி அம்பாள் அமரக்கூடிய பீடம் பழுது பார்த்து சரி செய்வது உள்ளிட்ட தேரின் அனைத்து பகுதிகளும் முழுமையாக செப்பனிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா இனிதே நிறைவு: 4 நாட்களில் 40 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை!

ABOUT THE AUTHOR

...view details