திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த மார்ச் 9ஆம் தேதி கோயில் விழாவில் கலந்து கொண்ட சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக மணிகண்டன், பிரபாகரன், தினேஷ், சதீஷ், பாலு, மோகன், நந்தகுமார் மற்றும் நவீன்குமார் ஆகிய எட்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எட்டு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.