திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியைச் சேர்ந்தவர் திருக்குமரன். திமுக கட்சியைச் சேர்ந்த இவர், பெரியவரிகம் 6 ஆவது திமுக மாதனூர் ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், இவர் தனது முகநூலில் "திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களை கருணை கொலை செய்து விடலாமே! மக்கள் பணி செய்ய முடியாமல் தவிப்பு?" என பதிவு செய்துள்ள நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினர் திருக்குமரனிடம் கேட்டபோது, “நான் 6வது வார்டு பெரியவரிகம், மாதனூர் ஒன்றியக் குழு உறுப்பினராக உள்ளேன். மாதனூர் ஒன்றியக் குழுத் தலைவர் சுரேஷ்குமார், துணைத் தலைவர் சாந்தி சீனிவாசன் ஆகியோர் மாதனூர் ஒன்றியத்தில் உள்ள ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு எந்த ஒரு வேலையும் கொடுக்கவில்லை.