திருநெல்வேலி:திருநெல்வேலி டவுன் கரிய மாணிக்க பெருமாள் அக்ரஹார சாலையில், சிவா தெருவில் பேசிக்கொண்டிருந்த சிறுவர்களுக்கு இடையே நேற்று (நவம்பர் 15) மாலை வாய் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது வாய் தகராறு முற்றி கைகலப்பான நிலையில், ஒரு சிறுவன் திடீரென அரிவாளை எடுத்து மற்றொரு சிறுவனை வெட்டுவதற்காக ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த வழியாக வந்த மூதாட்டி ஒருவர் இந்த தாக்குதலை பார்த்து அச்சமடைந்து செய்வதறியாமல் திகைத்து நின்றுள்ளார். அப்போது தகராறல் ஈடுப்பட்டிருந்த இரண்டு சிறுவர்களுள் ஒருவர் தாக்குதலை தவிர்க்கும் வகையில், தன்னை தாக்குபவரிடம் இருந்து தப்பிக்க அந்த மூதாட்டிக்கு பின் மறைந்து மெதுவாக நகர்ந்துள்ளார். பின் அந்த சிறுவன் கேடயமாகப் பயன்படுத்திய மூதாட்டியை இழுத்து தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் அருகில் இருந்த கண்காணிப்புக் (சிசிடிவி) கேமராவில் பதிவாகி இருந்த நிலையில், தற்போது அந்த வீடியோ காட்சி இணையத்தில் வேகமாகப் பரவிவருகிறது.