தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் அரிவாள், இரும்பு ராடுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்.. ஒரு வாரத்திற்குப் பிறகு விசாரணைக்கு வந்த சம்பவம்! - tirunelveli

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆயுதங்களுடன் வந்த மாணவர்களில் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாணவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதம்
மாணவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2024, 1:51 PM IST

திருநெல்வேலி:திருநெல்வேலி நகர்ப் பகுதிக்குள் இயங்கி வருகிறது அரசு உதவி பெறும் பள்ளியில், கடந்த வாரம் 9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் சிலரிடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஒருவரை ஒருவர் தக்க திட்டமிட்டு, கடந்த 18ஆம் தேதி புத்தகப்பையில் இரும்பு ராடு, அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு பள்ளிக்கு வந்தாக தெரிகிறது. இது குறித்த தகவல் அறிந்த உடற்கல்வி ஆசிரியர், மாணவர்களின் புத்தகப்பைகளை சோதனை செய்தார். அப்போது மாணவர் ஒருவரின் பையில் ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த உடற்கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரித்துள்ளார். இதனையடுத்து மாணவரின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவர் பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக 3 மானவர்கள் தற்காலிகமாக பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:“மாணவர்கள் லேப்டாப் கேட்டால் டாடா காட்டுகிறார்கள்”.. செங்கோட்டையன் கடும் விமர்சனம்!

இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு புகார் அளிக்கவோ, தகவல் தெரிவிக்கவும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் தான் சம்பவம் நடந்து ஒரு வார காலத்திற்குப் பின்பே இந்த விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது. தற்போது காவல்துறையினர் அங்கு விரிவான விசாரணையை நடத்தி வருகின்றனர்.

மேலும், திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் இது தொடர்பாக விரிவான விசாரணை செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு உள்ளார். திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாங்குநேரி மாணவர் மீது வீடு புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடங்கி, மாணவர்கள் பையில் ஆயுதங்களை எடுத்து வந்தது வரை பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இது போன்ற போக்கை மாணவர்கள் மத்தியில் களைய வேண்டும் என்ற நோக்கில் 'அன்பாடும் முன்றில்' என்ற இயக்கம் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடங்கப்பட்டது. அதன் செயல்பாட்டை அதிகரித்து, இது போன்ற மோதலை எடுப்பதற்காக நடவடிக்கை எடுப்பதோடு மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களை கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details