திருநெல்வேலி:பொங்கல் என்றால் அனைவரின் நினைவுக்கு வருவது சக்கரை பொங்கல், படையல் உணவு, கரும்பு எனலாம் இந்த பட்டியலில் சிறுகிழங்குகளுக்கு தனி இடமே உள்ளது. இந்த சிறுகிழங்குகள் திருமணமான மகளுக்கு பெற்றோர்கள் வழங்கும் பொங்கல் சீரில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
பொங்களுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் சிறுகிழங்குகள் குறித்து திருநெல்வேலி மாவட்டம் அம்காசமுத்திரம் அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடி கிராமத்து விவசாயிகள் ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசினார்கள். அப்போது பேசிய விவசாயி முகிலன், “ நான் கடந்த பல ஆண்டுகளாக சிறுகிழங்குகளை விளைவித்து வருகிறேன்.
அதிலும் பத்து ஆண்டுகளாக நான் "ஸ்ரீதாரா" புதுவகை சிறுகிழங்குகளை விளைவித்து வருகிறேன். இந்திய அளவில் அதிகபடியான சிறுகிழங்கு விளைவித்தால் எனக்கு கேரள அரசு தேசிய விருது கொடுத்தது. இந்த சிறுகிழங்குகள் பொங்கல் பண்டிகைகாகவே விளைவிக்கப்படுகிறது. இந்த கிழங்குகள் பொதுவாக 7-8 மாதங்கள் வளர்க்கூடியவை. நாற்று நடும் காலத்தையும் சேர்ந்தால், ஆண்டுக்கு ஒருமுறை தான் விளைகிறது. ஜனவரி மாதம் சரியாக பொங்கலை ஒட்டியே இந்த சிறுகிழங்குகள் அறுவடை செய்யப்படுகிறது. ஏக்கருக்கு 15,000 முதல் 20,000 வரை செலவு செய்து விளைச்சல் செய்துள்ளோம்.