தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை சரணாலயத்தில் புலிகள் கனக்கெடுப்பு பணி துவக்கம்! - Tiger census work - TIGER CENSUS WORK

Tiger census work: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மேகமலை புலிகள் சரணாலயத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது.

புலிகள் கனக்கெடுப் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் புகைப்படம்
புலிகள் கனக்கெடுப் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் புகைப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 4:59 PM IST

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயத்தில் ஏராளமான புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டெருமைகள், யானைகள், மான்கள், ராஜநாகங்கள், பெரிய அளவிலான மலைப் பாம்புகள், காட்டுப்பன்றிகள் என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

வனவிலங்கு கணக்கெடுப்பு: இந்த வனவிலங்குகளை வனத்துறையினர் தொடர்ந்து கணக்கெடுக்கும் பணியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், வரையாடுகள், சாம்பல் நிற அணில்கள், பறவைகள், யானைகள் கணக்கெடுப்பு முடிவுற்றது.

புலிகள் கணக்கெடுப்பு:இந்த நிலையில், நேற்று முதல் 8 நாட்களுக்கு புலிகள் கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது. முதல் நாளான நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்க மையத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் புலிகள், சிறுத்தைகள், கரடிகள் போன்ற ஊன் உன்னிகள் மற்றும் தாவர உன்னிகளான மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளைக் கணக்கெடுப்பது குறித்து பங்கேற்க உள்ள வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சுமார் 42 பீட்டுகள் உள்ளன. இந்த 42 பீட்டுகளிலும் உள்ள வனத்துறையினருக்கு நேற்று பயிற்சி நிறைவு பெற்ற நிலையில், தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் இன்று முதல் சென்று புலிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கோவிலாறு அணை, பிளவக்கல் பெரியாறு அணை, சதுரகிரி மலைப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.

கண்காணிப்பு பணிகள்:இந்த கணக்கெடுப்பின் முதல் மூன்று நாட்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வனப்பகுதியில் தினமும் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கின்றனர். இவற்றில் வனவிலங்குகளின் தடயங்கள், எச்சங்கள் ஆகியவற்றையும் சேகரிக்கின்றனர்.

இதனையடுத்து, அடுத்த 3 நாட்களுக்கு நேர்கோட்டு கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்தப் பணியில் வனத்துறையினர் தங்கள் பகுதியில் புலிகள் வசிக்கும் இடங்களை தேர்வு செய்த பின்னர், அதன் நடமாட்டத்தை அறிந்து, வனப்பகுதியில் கேமராக்களும் பொருத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:சேவலுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த பாசக்கார உரிமையாளர்.. நெல்லையில் நெகிழ்ச்சி! - PET COCK DEATH BANNER

ABOUT THE AUTHOR

...view details