தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள மணக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து என்ற பாயாசம் (47). இவர் இந்து முக்குலத்தோர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் நிறுவனத் தலைவராக உள்ளார்.
இவர் மீது கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக பி சி ஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த பேச்சிமுத்து கையெழுத்திடாமல் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கருங்குளத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேச்சிமுத்து கலந்து கொள்ள வருகிறார் என்ற தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்வதற்காக விரைந்து சென்றனர்.