தூத்துக்குடி:சோரியாசிஸ் என்பது பல காரணிகளால் ஏற்படும் அழற்சி தோல் நோயாகும். இது மொத்த மக்கள்தொகையில் 2-3 சதவிகிதம் பேரை பாதிக்கிறது. இவர்களில் சுமார் 20-30 சதவிகிதம் நோயாளிகள், மூட்டுகளையும் தாக்கும் சோரியாடிக் ஆர்த்ரைடிஸ் நோய் பாதிப்புக்குள்ளாகின்றனர். சோரியாசிஸ் நோய்க்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இன்னும் இதற்கான ஒரு முழு தீர்வு அளிக்கும் சிகிச்சை முறை எட்டப்படவில்லை.
நியூரீபிக்ஸ் பீட்டா குளுக்கான்களைப் பயன்படுத்தி நடத்திய முந்தைய மருத்துவ ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்ட, ஜப்பானிய விஞ்ஞானிகளின் அறிக்கைகளின் அடிப்படையில், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி தோல் மருத்துவத் துறை பேராசிரியர் டாக்டர் ஜே. ததேயுஸ் குழுவினர் நடத்திய மருத்துவ ஆராய்ச்சியின் முடிவுகள், ஜூன் 27-29ல் ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற சர்வதேச தடிப்புத் தோல் அழற்சி சங்கங்களின் 7வது உலக சோரியாசிஸ் மற்றும் சோரியாடிக் ஆர்த்ரிடிஸ் மாநாட்டில் பகிரப்பட்டது.
இதனையடுத்து, தூத்துக்குடி தோல் மருத்துவர் டாக்டர் ததேயுஸ் 20 நோயாளிகளுக்கு இந்த சோதனையை நடத்தியுள்ளார். அவர்களில் 10 பேர் வழக்கமான சிகிச்சைகளுடன் நியூ ரீபிக்ஸ் உட்கொண்டனர். ஆய்வில், நியூரீபிக்ஸ் உட்கொண்ட 80% நோயாளிகள் தங்கள் தோல் நிலையில் முன்னேற்றங்களை உணர்ந்துள்ளனர்.
தோலில் லிம்போசைட்டுகளின் ஊடுருவல், தோல் தடிமன், புண்களின் வீரியம், ஆகியவை வழக்கமான சிகிச்சையை மட்டுமே எடுத்துக்கொண்டவர்களைவிட, நியூ ரீபிக்ஸ் உட்கொண்டவர்களில் கணிசமாகக் குறைந்தது. சோரியாசிஸ் நோயின் தீவிரத்தை மதிப்பிடுவதற்கான PASI ஸ்கோரும் நியூரீபிக்ஸ் குழுவில் கணிசமாகக் குறைந்துள்ளது.