தூத்துக்குடி:தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 260-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் கடலில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி எல்லைக்குள் கேரள விசைப்படகில் கேரள மீனவர்கள் இரவு, பகல் மீன் பிடித்து வருவதாகவும் அதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரியும் தூத்துக்குடி மீனவர்கள் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.
கேரள மீனவர்களை சிறைபிடித்த தூத்துக்குடி மீனவர்கள்:
மேலும், கடந்த மாதம் கேரள விசைப்படகில் மீனவர்கள் தூத்துக்குடி கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடித்து கொண்டிருந்த போது, அவர்களின் படகை பறிமுதல் செய்து, மீனவர்களையும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கும் அழைத்து வந்தனர். இதனால், தூத்துக்குடி மீனவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், முன்னாள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் மீனவர்களுக்காக ஒரு குழு அமைத்து, அந்த குழு அறிக்கை ஒன்று சமர்ப்பித்தாகவும் அதில், தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இரவு, பகல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் என உள்ளதால் அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
போராட்டத்தில் மீனவர்கள்:
இதில் 6வது நாளான இன்று (பிப்.15) மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் கோரிக்கையை முன் வைத்து விசைப்படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஐஸ் வியாபாரிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் தமிழக அரசு மற்றும் மீன்வளத் துறையை கண்டித்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திடீரென மீனவர்கள் சாலை மறியல் போராட்டமாக கடற்கரை சாலையில் உள்ள பழைய துறைமுகம் எதிரே உள்ள சார் ஆட்சியர் அலுவலகம் வரை 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை: