தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜன.26 திருச்சியில் விசிக மாநாடு; சமத்துவ சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார் திருமாவளவன்..! - VCK leader Thirumavalavan

VCK Conference: திருச்சியில் வரும் ஜன.26ஆம் தேதி விசிக சார்பில் மாநாடு நடைபெறவுள்ளது இதற்கான சுடர் ஓட்டத்தை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று (ஜன.23) தொடங்கி வைத்தார்.

Vck conferenc
விசிக மாநாடு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 10:03 PM IST

திருச்சி:2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. குறிப்பாகக் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பது பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பணிகளில் இறங்கியுள்ளது.

அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், 'வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில்' வரும் 26ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கு விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தலைமை தாங்குகிறார்.

இந்த மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் 5 லட்சம் பேர் கலந்து கொள்ளும் அளவிற்கு மாநாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அரசியல் வெள்ளிவிழா, கட்சித் தலைமையின் அகவை 60 மணிவிழா, இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றி கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக மாநாடு நடைபெறவுள்ளது.

வரும் ஜனவரி 26ஆம்‌‌ வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் தொடங்கவுள்ள இந்த விழாவில், வரவேற்புரையை விசிகவின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனை செல்வன் வழங்குகிறார். மாநாட்டின் நோக்க உரையை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் வழங்குகிறார்.

தேசிய தலைவர்கள்:இவ்விழாவின் சிறப்புப் பேருரைகளைத் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார். மேலும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட பல இடது சாரி கட்சிகளின் தேசிய தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாநாட்டிற்கான மேடை பந்தல் பேரி கார்டுகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று (ஜன.23) விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் தமிழக முதல்வரின் பாதுகாப்பு பிரிவினர் அதிகாரிகள் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் ஆகியோர் மாநாட்டுப் பணிகளை ஆய்வு மேற் கொண்டனர். இந்நிலையில் சென்னை அம்பேத்கர் திடலில் மாநாட்டிற்காகச் சுடர் ஓட்டத்தை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று (ஜன.23) தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க:தீவிர தேர்தல் களத்தில் திமுக.. கதாநாயகியாக வளம் வரும் கனிமொழி எம்.பி!

ABOUT THE AUTHOR

...view details