தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அதிமுக-பாஜக இடையே என்ன நடக்கிறது?" - திருமாவளவன் சொல்வது இதுதான்! - THIRUMAVALAVAN

அதிமுகவை தனிமைப்படுத்தி, மீண்டும் கூட்டணியில் சேர்க்க வேறு வழியில்லை என்கிற நெருக்கடியை பாஜக அளித்து வருகிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Thirumavalavan
திருமாவளவன் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2024, 11:46 AM IST

கிருஷ்ணகிரி:அதிமுகவை தனிமைப்படுத்தி, மீண்டும் கூட்டணியில் சேர்க்க வேறு வழியில்லை என்கிற நெருக்கடியை பாஜக அளித்து வருகிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள விசிக நிர்வாகி இல்லத்திருமண விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்பித்தார். முன்னதாக தனியார் ஓட்டலில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "2026 தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வா.. சாவா? தேர்தல் என கே.பி.முனுசாமி பேசியிருக்கிறார். அவர் பேசியதைப் புறம் தள்ள முடியாது. அதிமுகவுக்கு மிகவும் நெருக்கடியான காலம் தான். அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக, பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதிமுக முன்னெடுக்கக் கூடிய அனைத்து முயற்சிகளையும் முறியடித்து வருகிறது.

அதிமுகவை தனிமைப்படுத்தினால் வேறு வழியில்லாமல் பாஜக உடன் இணையும் என திட்டமிட்டு நெருக்கடி அளித்து வருகிறது. அதிமுக சட்டமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைக்கிறதா? அல்லது தனித்தன்மையைப் பாதுகாப்பார்களா என்பதுதான் அவர்கள் முன்னால் இருக்கும் ஒரு சவால். அதனைத் தான் அதிமுக துணை பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியிருப்பார் என கருதுகிறேன். அதைத் அதிமுக தலைமைதான் கூற வேண்டும்,"என்றார்.

இதையும் படிங்க:விசிக தலைவர் எங்கே செல்வார்? அதிமுக வழக்கறிஞர் இன்பதுரைக்கு திருமாவளவன் பதில்!

2026 தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாதக, தவெக என 5 முனை போட்டி நிலவுமா என்கிற கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், "2026 தேர்தல் குறித்த கேள்விகளுக்கான பதில் தேர்தல் நேரத்தில் தான் தெரியவரும். எத்தனை முனை போட்டி நிலவினாலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். இந்த கூட்டணி இந்தியாவிற்கு முன்மாதிரியான கூட்டணியாகவும், வலுவான கூட்டணியாகவும், கருத்தியல் சார்ந்தும் உள்ளது. இந்த கூட்டணியைத் தமிழக மக்கள் மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர வைப்பார்கள். திமுக ஆட்சியைப் பிடிக்கும்," எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details